

வேந்தனுக்கும்
தலை வணங்காது
சோளக்கொல்லை பொம்மை
எழுதுவது அல்ல
எழுவது தான்
எழுத்து
இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்....
அருவி நீர்
பாறையில் மோதி மோதி
சிதறியது பாறை
நீர் ஊற்றி மனிதனுக்கு
நன்றி சொல்லும் செடிகள்
கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்
உடைத்தெறிந்தேன் கண்ணாடியை
இனி அழகு
என் முகம்
திடீரென மழை
குளம் நெடுக
வியப்புக் குறிகள்!
கல் மனசுக்காரர்கள்
பாருங்கள்
பாறையை உடைக்கிறார்கள்
செத்த அனாதை ஈ
பாடை தூக்கம்
எறும்புகள்
செவிடன் இறந்தான்
தலைமாட்டில்
ஒப்பாரி!
அந்த ராப்பிச்சைக்காரன்
இறந்து போனான்
அனாதையானது பிளாட் ஃபார்ம்
பகைவனின் எண்ணிக்கைக்கு
அஞ்சாதே!
ஆயிரம் காக்கைகளுக்கு
ஒரு கல்!
ஆறுமுகன் கோயிலில்
ஆறு ஏழு பூட்டுக்கள்
யாமிருக்க பயமேன்?
ஓட்டுப் போட்டுப் விட்டுத்
திரும்பி வந்த பிணம்
திடுக்கிட்டது
தனது கல்லறையில் வேறொரு பிணம்
அரசியல் சாக்கடை என்றார்கள்
பரவாயில்லை என்று இறங்கினேன்
உள்ளே முதலைகள்
கரும்புள்ளி ஏந்தினோம்
விரலில்
வெறும் புள்ளிகள் பெரும்
புள்ளிகள்
தேர்தல்
வேர்களிலுமா
பூக்கள்
மரத்தடியில் மாணவிகள்
வானத்தில் ராக்கெட்
வட்டமிடும் இன்சாட்
இங்கு வயல் வெளிகளில் பவர் கட்
-உங்கள் கவிதைக்காரன்


4 comments:
//ஆறுமுகன் கோயிலில்
ஆறு ஏழு பூட்டுக்கள்
யாமிருக்க பயமேன்?//
கவிதை நச் :))
தயவுசெய்து பின்னூட்ட பெட்டியை பாப் அப் விண்டோவிலிருந்து மாற்றுங்கள் அய்யா :((
//அந்த ராப்பிச்சைக்காரன்
இறந்து போனான்
அனாதையானது பிளாட் ஃபார்ம்//
கவிதைகள் அனைத்துமே அசத்தல் ரகம் !
அருமையான கவிதைகள்
Post a Comment