குறைந்த நாட்களில் அதிகமானவர்களின் மனதில் இடம் பிடித்த வலைத்தளம்

pls click:
www.tamil1999.blogspot.com>>>...
 தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம் 
(complete tamil font online guide)
''நன்றி தமிழ்நாடே!''

வெப்ப நாட்டில் ஓடுகிற நதிக்கு சுவை அதிகம்.வெப்ப நாட்டில் பூக்கிற பூவுக்கு வாசம் அதிகம். வெப்ப நாட்டில் இருக்கிற பாம்புக்கு விஷம் அதிகம். வெப்ப நாட்டில் பிறந்த தமிழா!நீ மட்டும் எப்படி மக்காக இருக்க முடியும்? -பெரியார்.




"உன்னை வெல்வாய் தமிழா ! உலகை வெல்வாய் தமிழா !" -கவிப்பேரரசு வைரமுத்து.....



ஹைக்கூ பார்வையில் "அதிரடி மன்னன் ஜாக்கிசான்!"

Friday, June 20, 2008

ஹைக்கூ வேட்டை







வேந்தனுக்கும்
தலை வணங்காது
சோளக்கொல்லை பொம்மை

எழுதுவது அல்ல
எழுவது தான்
எழுத்து

இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்....

அருவி நீர்
பாறையில் மோதி மோதி
சிதறியது பாறை

நீர் ஊற்றி மனிதனுக்கு
நன்றி சொல்லும் செடிகள்
கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்

உடைத்தெறிந்தேன் கண்ணாடியை
இனி அழகு
என் முகம்

திடீரென மழை
குளம் நெடுக
வியப்புக் குறிகள்!

கல் மனசுக்காரர்கள்
பாருங்கள்
பாறையை உடைக்கிறார்கள்

செத்த அனாதை ஈ
பாடை தூக்கம்
எறும்புகள்

செவிடன் இறந்தான்
தலைமாட்டில்
ஒப்பாரி!

அந்த ராப்பிச்சைக்காரன்
இறந்து போனான்
அனாதையானது பிளாட் ஃபார்ம்

பகைவனின் எண்ணிக்கைக்கு
அஞ்சாதே!
ஆயிரம் காக்கைகளுக்கு
ஒரு கல்!

ஆறுமுகன் கோயிலில்
ஆறு ஏழு பூட்டுக்கள்
யாமிருக்க பயமேன்?

ஓட்டுப் போட்டுப் விட்டுத்
திரும்பி வந்த பிணம்
திடுக்கிட்டது
தனது கல்லறையில் வேறொரு பிணம்

அரசியல் சாக்கடை என்றார்கள்
பரவாயில்லை என்று இறங்கினேன்
உள்ளே முதலைகள்

கரும்புள்ளி ஏந்தினோம்
விரலில்
வெறும் புள்ளிகள் பெரும்
புள்ளிகள்
தேர்தல்

வேர்களிலுமா
பூக்கள்
மரத்தடியில் மாணவிகள்

வானத்தில் ராக்கெட்
வட்டமிடும் இன்சாட்
இங்கு வயல் வெளிகளில் பவர் கட்


-உங்கள் கவிதைக்காரன்




4 comments:

சென்ஷி said...

//ஆறுமுகன் கோயிலில்
ஆறு ஏழு பூட்டுக்கள்
யாமிருக்க பயமேன்?//

கவிதை நச் :))

தயவுசெய்து பின்னூட்ட பெட்டியை பாப் அப் விண்டோவிலிருந்து மாற்றுங்கள் அய்யா :((

சென்ஷி said...
This comment has been removed by a blog administrator.
கோவி.கண்ணன் said...

//அந்த ராப்பிச்சைக்காரன்
இறந்து போனான்
அனாதையானது பிளாட் ஃபார்ம்//

கவிதைகள் அனைத்துமே அசத்தல் ரகம் !

தமிழ். சரவணன் said...

அருமையான கவிதைகள்

Blog Archive