குறைந்த நாட்களில் அதிகமானவர்களின் மனதில் இடம் பிடித்த வலைத்தளம்
pls click: www.tamil1999.blogspot.com>>>... தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம் (complete tamil font online guide) ''நன்றி தமிழ்நாடே!''
Friday, July 11, 2008
தவத்திரு குன்றக்குடி அடிகளார்- அவர்களின் கதை
பாகம் 1
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
-அவர்களின் கதை
இந்த நூற்றாண்டின் முற்பகுதியில்...
தஞ்சை மாவட்டத்திலுள்ள, ஒரே ஒரு தெருவாக மட்டுமே இருந்த அந்த சின்னஞ்சிறிய கிராமத்தின் பெயர் தான் நடுத்திட்டு.
அந்த கிராமத்தில் வசித்த சீனிவாசம் பிள்ளை-சொர்ணத்தாச்சி என்ற தம்பதிகளுக்கு பிறந்த, ஓர் அக்கா, 2 அண்ணன்களு க்குப்( கோபால கிருஷ்ணன்,பாண்டுரங்கன்)பிறகு 1925 -ஆம் வருடம் ஜீலை 11ந்தேதி பிறந்த கடைக்குட்டி பையனின் பெயர் தான் ரங்கநாதன்.
திருமணமாகிப் போன அக்காள் வீட்டில் போய் இருந்த சிறுவன் ரங்கநாதனின் சேட்டையை சகிக்க முடியாமல், அக்காளின் கணவர் அவனை அடித்து விட...
பெற்றோர்களிடம் வந்து அழுது அடம்பிடித்த ரோஷக்கார ரங்கநாதனுக்கு, ஆறு வயதானதால் ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப் பட்டான்.
அப்பா சீனிவாசன் விளையாட்டுத்தனமாகப் பந்தயம் கட்டியதில், தனக்கிருந்த விளைநிலத்தை இழந்து பிறகு, திருவேட்களம் என்ற கிராமத்திற்கு அவனின் குடும்பம் இடம் பெயர்ந்தது.
இரண்டு மூன்று பசு மாடுகளை வளர்த்து,பால் கறந்து ,அதனால் வரும் வருமானம் என்று எளிமையாக வாழ்ந்து வந்தது அவனின் குடும்பம்.
வீட்டு மாடுகளிடம் கறந்த பாலை வீடு வீடாக ஊற்றி வரும் வேலை ரங்கநாதனுக்கு ஒதுக்கப் பட்டது.
அந்த சமயத்தில்தான் ஈழத்தைச் சேர்ந்த சுவாமி விபுலானந்த அடிகள் அண்ணாமலைப் பல்கலைழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக வந்து சேர்ந்தார்.
திருநீறு அணிந்த நெற்றியுடன் கள்ளங் கபடமில்லாமல், ஓடியாடி துள்ளித் திரிந்த ரங்கநாதனிடம் சுவாமிகள்,தன் மனசை பறிகொடுத்தார்.
மாலை நேரங்களில், தன் மடியில் வைத்துக் கொஞ்சுவது,குதிரை வண்டியில் உரிமையோடு சுவாமிகளோடு எங்கேனும் செல்வது என்று அவர்கள் இருவருக்குமான உறவு தாய் பசுவுக்கும் கன்றுக்குமான உறவைப் போல இறுகியது.
"கடவுளை நம்பு"
"தமிழை நன்றாகப் படி"
"தீண்டாமை கூடாது"
"மனிதாபிமானத்துடன் எல்லோருக்கும் உதவு"
என்று சொன்ன விபுலானந்தரின் அறிவுரைகள்...
நாமும் இவரைப் போல் துறவியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற விதையை விதைத்தது .
மூன்றாண்டுக் காலம் பணியாற்றிய பிறகு விபுலானந்த அடிகள் இலங்கைக்கு திரும்ப நேரிட்டது. இதை அறிந்த ரங்கநாதன் "நானும் வருவேன்", என்று அடம் பிடித்தான்.
ஒரு நாள் இரவில் ரங்கநாதன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, இவன் சிறுவன் இலங்கைக்குப் போன பிறகு "அம்மா ,அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று அழுவான்.எனவே இப்போது இவனை அழைத்து போவது சரியல்ல. பெரியவனாகட்டும் அப்போது பார்க்கலாம்", என்று சொல்லி இலங்கைக்கு சென்று விட்டார்.
அதன் பிறகு அவரை உயிரோடு பார்க்கும் வாய்ப்பு இனி கிடைக்காது என்று அந்த சிறுவனுக்கு தெரியாது.
அதற்கு பிறகு 1953 ஆம் வருடத்தில் (28 வயதான) காவி உடையணிந்த குன்றக்குடி அடிகளார் இலங்கை சென்றபோது சமாதியில் மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி தான் செலுத்த முடிந்து.
விதை முளைத்து கண் விழித்த போது விதை விதைத்தவனின் கண்களை மண் மூடியிருந்தது.
வழக்கறிஞர் தொழிலுக்கு படித்திருந்த இரா.பி.சேதுப் பிள்ளை தமிழ் மொழியின் மீது கொண்டிருந்த தணியாத காதலால், அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஆனார்.
ரங்கநாதன் பால்கார சிறுவன் என்பதால் எளிதில் சேதுப் பிள்ளை அவர்களின் அன்பையும் பெற்றான்.தினமும் ஒரு குறளை தன்னிடம் ஒப்புவிக்கச் சொல்லி ,அன்றாடம் காலணாவை பரிசாக வழங்குவார்.
ஒரு நாள் சிறுவன் தயங்கித் தயங்கி சேதுவின் முன்னால் போய் நின்றான்.
"பள்ளியில் சாரணர் குருளையர் இயக்கத்தில் சேர சீருடை வேண்டும்", என்று கேட்டான்.
அவனை அருகில் அழைத்து குடும்ப நிலவரத்தை பரிவோடு விசாரித்தார்.
அவனுக்கு சீருடை வாங்க ஏற்பாடு செய்தார்.
அவர் வழக்கறிஞர் என்பதால் அவனின் தந்தை பந்தயம் கட்டி இழந்த விளை நிலத்தையும் மீட்டுத் தந்தார்.அதனால்அவன் குடுபத்தின் மரியாதைக்குரிய மனிதரானார்,சேதுப் பிள்ளை.
நாமும் இவரைப் போல எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பிஞ்சு நெஞ்சில் கல்வெட்டாக விழுந்தது.
சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்...
_ஆதிசிவம்.
Sunday, July 06, 2008
Friday, July 04, 2008
கமல் அவதாரம்
பட விமர்சனம்
தசாவதாரம்
கதை:
கிருமி கண்ட சோழன் கமலஹாசன் எய்ட்ஸை போலவே, அல்லது அதை விட மோசமாக பரவிக்கொல்லும் ஓர் உயிரியல் வெடிகுண்டை சதிக்கும்பலிடமிருந்து மீட்டு உலகையும் காப்பது .
கதையின் கதை:
சைவ,வைணவப் பிரச்னையில் சிக்கிச் சாகடிக்கப்படும் (மறைந்த எழுத்தாளர் ரங்கராஜன் என்ற சுஜாதாவுக்கு அர்ப்பணமா,கமல்?இந்த பெயர் சூட்டல்?)ரங்கராஜ நம்பி (கமல் 1)யின் நடிப்பும் பின்னணியில் ஆக்ரோஷமாக வெளிவரும் கமலின் கர்ஜனையும் சிங்கத்தின் சிலிர்ப்பு.
அமெரிக்க ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானியாக வரும் தமிழ் கோவிந்த ராமசாமி(கமல் 2),கிருமி வெடிகுண்டையை பணத்துக்காக விற்க விரும்பும் சதிக்கூட்டத்துக்கு கிடைக்காமல் தப்பி ஓட, துரத்துகிறார்,வில்லன் கமல் (3).நண்பனின் வீட்டில் பதுங்கி இருக்கும் போது, வில்லனால் சாகடிக்கப்படுகிறார்கள் நண்பனும் ,நண்பனின் மனைவியும்.இதைக் கேள்விப் பட்டு நண்பனின் மனைவியின் அண்ணனாக
வில்லனைத் தேடிக் கிளம்புகிறார், சா ப்பானிய கராத்தே கமல்(4).தமிழ்நாட்டு விமான நிலையத்தில் சிக்கிக்கொள்ளும் நாயகன் கமலை ,விசாரிக்க வருவது ஆந்திர போலீஸ் கமல்(5).வில்லன் கமலிடம் மாட்டித் தப்பிக்க முயற்சிக்கையில் வில்லன் கமல் துப்பாக்கியில் சுட, அது பாடகராக வரும் சிங் கமல்(6) மேல் பட்டு அவர் பிழைத்துக் கொள்கிறார்.
அந்த கிருமி வெடிகுண்டு வயதான கிழவிக்கு (கமல் 7) அனுப்பப் பட,அது சாமியின் சிலைக்குள் சிக்க சிலையோடு தப்பிக்கும் போது அசினும் பிசின் போல ஓட்டிக் கொள்ள, காரில் ஏறி தப்பித்துப் போகும் போது, நடக்கும் விபத்துக்குள்ளான காரின் உள்ளிருத்து கிளம்புகிறார்,கட்டை வைத்து நடக்கும் இன்னொரு உயரமான கமல்(8), அந்த குண்டை கடலில் தூக்கிப் போட்டு அழிக்க முயலும் போது, அது வில்லன்
கமலிடம் சிக்க, அவரைத் தேடி வந்த சப்பானிய கமலுக்கும் நடக்கிற சண்டையின் இறுதியில்,அந்த கிருமி குண்டை உடைத்து வில்லன் கமல் வாய்க்குள் போட, சுனாமியின் வாய்க்குள் வில்லனோடு சேர்ந்து கிருமி குண்டும் மாட்டி அழிந்து போகிறது.அந்த அழிவில் மாட்டிக் கொண்டு மாண்டுபோவது பூவராகன் என்ற கமலும் (கமல் 9) கூட.
அதை அமெரிக்க ஜார்ஜ் புஷ் (கமல் 10) தலைமையில் நடக்கும் கூட்டத்தில் நடந்த சம்பவங்களை விளக்குகிறார். படம் முடிகிறது!
நாட்டைக் கெடுத்த நல்லவர்களும் தலை காட்டி விட்டுப் போகிறார்கள்.
உயரமான கமலும்,சிங் கமலும் வீண்.அசின் கமல் காதல் இளநீர் இதம். என்றால் இன்னொரு பக்கம் பார்த்தால் கதைக்கு அதுவே வேகத்தடை.உலகநாயகன் கமலை விட வில்லன் கமலிடம் நல்ல வேகம்.வில்லன் கமலும் அசினும் படம் முழுக்க பரவியிருக்கிறார்கள்.நம்ம வீட்டு டிவிப் பெட்டியில் ஆங்கிலப் பேய்கள் கூட தமிழ் பேசும் போது, படத்தில் நிறையப் பேர் அந்நிய மொழிகள் பேசுகிறார்கள்.
பாடல்கள்...
"உலக நாயகனே!"... என்ற வைரமுத்துவின் வைரவரிகளுக்கு கே.எஸ்.ரவிக்குமார் வந்து கரகாட்டம் ஆடுவது கொடுமை.
"கல்லைக் கண்டால்"... என்ற பாடல் கல் மனசையும் கரைக்கும் வாலியின் மயக்கும் வரிகள்.
"முகுந்தா முகுந்தா"... என்ற பாடல் சாதனா சர்க்கத்தின் ஐஸ் கிரீம் குரல் நம்மை கரைந்து போகச் செய்கிறது.
1929 ஆம் ஆண்டிலேயே வந்த only me என்ற ஆங்கில இங்கிலாந்து படத்தில் அந்த படத்தின் கதாநாயகன் lutino lan 24 வேடங்களில் நடித்து விட்டார் என்றும், ஏற்கனவே பலபேர் 12,14 வேடங்களில் நடித்து விட்டார்கள்.இவர் என்ன பெரிய உலக நாயகனா? என்ற கமலுக்கு எதிரான அந்த எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்.
இந்த மண்ணில் கமலைத் தவிர உலக நாயகன் என்ற பெயருக்கு தகுதி யாருக்கு இருக்கிறது?
சாதி, மதம் பார்த்து வளரும் மேல்சாதிக்கார மனநிலை தவறிய கிழவி,சுனாமியில் இறந்த கீழ்சாதியில் பிறந்த கமலைக் கட்டிக் கொண்டு அழும்போது, மனநிலை தவறியவள் அந்த கிழவி இல்லை நாம் தான் என்று உணர வைப்பது பல பரிசுகளை வென்ற பக்கா கமல் தனம்.
"ஏசுவும்,அல்லாவும் இந்தியாவுக்குள் அல்லது அதன் அரசியலுக்குள் புகாத நூற்றாண்டு.மோதிக் கொள்ள வேறு கடவுள்கள் இல்லாததால் சைவம்,வைணவம் என்று பிரிந்து பக்தர்கள் வாயிலாக தமக்குள் மோதிக் கொண்ட நூற்றாண்டு."
"யானைக்கும் சரி,மனிதனுக்கும் சரி.மதம் பிடித்துப் போனால் தொல்லை தான்."
"மத நெறி ,மத வெறி ஆனது."
கமலிடமிருந்து சாமி சிலையை பிடுங்கி தொடர் வண்டிப் பெட்டிக்குள் உள்ள ஒரு கழிவறைக்குள் புகும் அசின் "அய்யோ! சவ்ச்சாலயம்" என்று செத்துப் போன சமஸ்கிருதத்தில் கொஞ்சலாக கத்த...
"சரி விடுங்க அதுவும் ஆலயந்தானே" என்னும் கமலின் நக்கல் வசனங்களுக்கும்
"எனக்கு சாமி தான் முக்கியம்", என்று அசின் ஓட...
"எனக்கு மனுசங்க தான் முக்கியம்" என்று கமல் விபத்து நடந்த இடத்துக்கு
தூணியிலயும்,துரும்பிலயும் இருக்கிற உன் கடவுள் பாண்டிச்சேரியில் இருக்கா மாட்டாரா?
கடவுள் இல்லைன்னு நான் எங்க சொன்னேன் இருந்தா நல்லா இருக்கும்னுதானே சொல்றேன்(எப்படி கமல் நீங்க மட்டும் இப்படி இதமா சொல்றீங்க?)
என்ற எல்லா வசனங்களுக்கும் பெரியார் திடல் வழங்கும் விருது, நிச்சயம்!
"உங்கள் சாதனையை,உங்களால் தான் முறியடிக்க முடியும்."
தசாவதாரம் படம் பற்றி....
தமிழர் தலைவர் "கி.வீரமணி"
சேதி:
கடவுளை இல்லை. மனிதர்களைப் பற்றி கவலைப் படுபவர்களால் மட்டுமே இந்த பூமியை காப்பாற்ற முடியும்.
_ஆதிசிவம்,சென்னை.
Sunday, June 29, 2008
வலி-கவிதை
Friday, June 20, 2008
மினரல் வாட்டரும் புற்றுநோயும்
பொதுவாக மினரல் வாட்டர்
பாட்டிலில் உள்ள தண்ணீரை
குடித்த பின் அதைத் தூக்கி
எறிந்து விடவேண்டும்.அந்த
பாட்டில்கள் pet (என்பது ஒரு
நச்சுப் பொருள்) என்று
சொல்லப் படுகிறது.
அந்த நச்சுப்பொருள்
தண்ணீருடன் கலந்து புற்று
நோயை உண்டு பண்ணும்.carcinogenic
element என்ற ஒரு பொருளை
வெளியிடும்.அதுவும்
தண்ணீரோடு கலந்து விடும்.
பிளாஷ்டிக் பாட்டில்களை
திரும்பத் திரும்ப
பயன்படுத்துபவராக
நீங்கள் இருந்தால் ,ஒரு
சின்ன சோதனைக்கு பிறகு அதை
நீங்கள் தொடரலாம்.
மினரல் பாட்டிலை எடுத்து
அதன் அடியில் பாருங்கள்..
அதில் இருக்கும் முக்கோண
வடிவத்தின் உள்ளே ஒரு எண்
போட்டிருக்கும்.அந்த எண்
5-க்கு மேல் இருந்தால் தான்
அந்த பாட்டிலை பலமுறை
பயன்படுத்தலாம்.
பெரும்பாலும் நம்
பயன்படுத்தும்
பாட்டில்களில்பதியப்பட்ட எண் 1-ஆகத்
தான் இருக்கும்.
புத்திசாலிகளும் ,அதிக
நினைவாற்றல்
கொண்டவர்களும்
பெரும்பாலும் கடவுள்
நம்பிக்கை
இல்லாதவர்களாகவே
இருக்கிறார்கள்.இது
லண்டன் உல்ஸ்டர்
பல்கலைகழகத்தின் ஆய்வு.
சிங்கத்தின் முக்கிய
வேலையே தூக்கம்
தானாம்.தினமும் 20 மணிநேரம்
தூங்குமாம்.
ஹைக்கூ வேட்டை
வேந்தனுக்கும்
தலை வணங்காது
சோளக்கொல்லை பொம்மை
எழுதுவது அல்ல
எழுவது தான்
எழுத்து
இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்....
அருவி நீர்
பாறையில் மோதி மோதி
சிதறியது பாறை
நீர் ஊற்றி மனிதனுக்கு
நன்றி சொல்லும் செடிகள்
கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்
உடைத்தெறிந்தேன் கண்ணாடியை
இனி அழகு
என் முகம்
திடீரென மழை
குளம் நெடுக
வியப்புக் குறிகள்!
கல் மனசுக்காரர்கள்
பாருங்கள்
பாறையை உடைக்கிறார்கள்
செத்த அனாதை ஈ
பாடை தூக்கம்
எறும்புகள்
செவிடன் இறந்தான்
தலைமாட்டில்
ஒப்பாரி!
அந்த ராப்பிச்சைக்காரன்
இறந்து போனான்
அனாதையானது பிளாட் ஃபார்ம்
பகைவனின் எண்ணிக்கைக்கு
அஞ்சாதே!
ஆயிரம் காக்கைகளுக்கு
ஒரு கல்!
ஆறுமுகன் கோயிலில்
ஆறு ஏழு பூட்டுக்கள்
யாமிருக்க பயமேன்?
ஓட்டுப் போட்டுப் விட்டுத்
திரும்பி வந்த பிணம்
திடுக்கிட்டது
தனது கல்லறையில் வேறொரு பிணம்
அரசியல் சாக்கடை என்றார்கள்
பரவாயில்லை என்று இறங்கினேன்
உள்ளே முதலைகள்
கரும்புள்ளி ஏந்தினோம்
விரலில்
வெறும் புள்ளிகள் பெரும்
புள்ளிகள்
தேர்தல்
வேர்களிலுமா
பூக்கள்
மரத்தடியில் மாணவிகள்
வானத்தில் ராக்கெட்
வட்டமிடும் இன்சாட்
இங்கு வயல் வெளிகளில் பவர் கட்
-உங்கள் கவிதைக்காரன்
Sunday, June 15, 2008
Friday, June 06, 2008
"பிளாஷ்டிக் மனிதர்கள்"-கவிதை
"பிளாஷ்டிக் பூமி" கவிதை
பிளாஷ்டிக் மனிதர்கள்
எழுபது சதம் தண்ணீரால் ஆனது பூமி
ஆனாலும்
விலைக்குத்தான் கிடைக்கிறது, தண்ணீர்!
தினம் தினம்
பசியால் செத்துக்கொண்டிருக்கும்
பூமியின் கைகளில்
50 பூமிகளை அழிக்க காத்திருக்கிறது
அணு ஆயுதங்கள்..
விலைவாசியைக் கட்டுப்படுத்த தெரியாத
வெடகம் கெட்ட- எங்களுக்கு
ராக்கெட் விடத் தெரியும்!
மனித இனத்தைத் தவிர
எல்லா உயிரினங்களும் அழிகிறதாம்
அதனால் என்ன
மனிதர்களே வித விதமான மிருங்களானபோது..
சாப்பிடும் உணவு தானியங்களிலிருந்து
பெட்ரோல் எடுக்கிறதாம், அமெரிக்கா
எல்லாம் ''தீர்ந்த'' பிறகு
''அவர்களின்'' பெட்ரோல் தொட்டியில் நிரப்ப
உங்களின் இரத்தமும் கேட்டு வருவார்கள்
அதுவரை
நாம் மவுனமாக இருப்போம்...
ஆம்! நாம் மனிதர்கள்!
பிளாஷ்டிக் மனிதர்கள்!...
-ஆதிசிவம்,சென்னை
Subscribe to:
Posts (Atom)